வரவேற்பு

"வளமான தமிழகம் வலிமையான பாரதம்"

உருவாகிட வேண்டும்; என்று மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் எண்ண்ங்களை நினைவில் கொண்டு, திருச்சி மாநகர EX காங்கிரஸ் சேவா தளம் தலைவர் ந.ரவி தலைமையில் இலவசமாக இந்த இணையதளம் இயங்குகிறது.


19 . 12 . 2010 அன்று தில்லியில் நடைப்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் 83 வது சிறப்பு மாநாட்டின் நிறைவு விழாவில் இளந்தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் தமிழாக்கம் :  
நமது மக்களை வாய்ப்புகளுடன் இணைப்பதுதான் நமது அரசியல் கடமையும் முக்கியத்துவமும் ஆகும்.அதேபோல் , நமது தொழில் நுட்பக் கட்டமைப்பும்  உள்கட்டமைப்பும் மக்களை ஒருவருடன் ஒருவர் இணைப்பதாகவும் , குக்கிராமங்களை நகரங்களுடனும்   கிராமங்களை உலகத்துடனும் இணைப்பதாகவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும் .

'ஒரு மனிதனுக்கு யாரைத் தெரியும் ? 'என்பதன் அடிப்படையில் இல்லாமல் ,'அவருக்கு என்ன  தெரியும் ?' என்பதன் அடிப்படையில் அவரது முன்னேற்றம் அமைவதற்குரிய அமைப்புமுறை உருவாக்கப்படாதவரை  ,நம்மால் வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது .

இதுதான் நமது தலைமுறையினருக்கு விடப்பட்டுள்ள சவால் !

ந.ரவி
கைபேசி
9842455142
விரிவாக்கம்